தமிழ் என்னும் சொல்லின் பொருள் என்ன என்ற வினாவிற்கு அறிஞர் பலர் பல்வேறு வகையான விடைகளைத் தந்துள்ளனர். தம்+இழ் எனப் பிரித்து இனிமை உடையது தமிழ் என்றனர் பலர். தமி+ழ் எனப் பிரித்து ழகர ஒலி பெற்றது தமிழ் என்றனர் சிலர். ஆனால் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் தம்+இல் = தம்மில் என்ற சொல்லே தமிழ் என்று மருவியதாகக் கருதுகின்றார்.
உலகின் முதல் மாந்தனாகத் தோன்றியவன் தமிழன்.அவன் பேசிய மொழிக்குப் பெயர் இடாமலேயே வழங்கி வந்தான். வாணிகம் காரணமாக வெளிநாடு சென்றவன் அங்கு வேறு மொழிகள் வழங்குவது கண்டு தம் வீட்டு மொழியைத் தம்மில் மொழி என்று அழைத்தான். அதுவே தமிழ் எனத் திரிந்தது என்று பாவாணர் கருதுகிறார்.
தமிழின் திரிபு மொழிகளுள் ஒன்றாகக் கருதப்படும் கொரியன் மொழியை அந்த மொழி பேசுவோர் தம் மொழி என்னும் பொருள்பட ஹான்கூக் என்று வழங்குவது பாவாணரின் கருத்துக்கு அரண் சேர்க்கிறது.
No comments:
Post a Comment